பொங்கல் பரிசாக, ‘அனுபூதி’ சொகுசு ரயில் பெட்டி, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நாளை (ஜனவரி 12) அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பெரம்பூர் ஐ.சி.எப் ரயில்பெட்டி தொழிற்சாலையில், நவீன வசதிகளுடன் அனுபூதி சொகுசு பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளன.
பல மொழி திரைப்படங்கள் பார்க்கவும், பாடல்கள் கேட்கவும் தொடுதிரை வசதியுடன் கூடிய எல்.இ.டி டி.வி, அவசரகால அழைப்பு, தானியங்கி கதவுகள், சொகுசு இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இப்பெட்டிகள் வடிவமைக்கபட்டுள்ளன.
பொங்கல் பரிசாக இந்த பெட்டிகள் நாளை (ஜனவரி 12, 2018) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சென்னையில் இருந்து மைசூர் செல்லும் சதாப்தி ரயிலில் இந்த பெட்டி இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து கூடுதல் ‘அனுபூதி’ பெட்டிகள் அறிமுகப்படுத்தப் படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.