ரேசனில் உளுந்தம் பருப்பு வழங்க முடியாதாம் - ஏன் என அமைச்சர் விளக்கம்

விலைவாசி உயர்வு காரணமாக, ரேசனில் உளுந்து வழங்க முடியாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Jan 12, 2018, 16:29 PM IST

விலைவாசி உயர்வு காரணமாக, ரேசனில் உளுந்து வழங்க முடியாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்றைய கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போது, சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன், ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, "ஒரு கோடியே 92 லட்சம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில் உளுந்தம் பருப்பு ரூ.170க்கு விற்பனையாகும் நிலையில், மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய உளுந்தம்பருப்பு மானியத்தை நிறுத்தி விட்டது.

இதனால் அரசுக்கு மாதம்தோறும் ரூ.207 கோடி கூடுதல் செலவு ஏற்படுவதால், ரேஷன் கடைகளில் உளுந்தம் பருப்புக்கு வழங்க இயலவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

You'r reading ரேசனில் உளுந்தம் பருப்பு வழங்க முடியாதாம் - ஏன் என அமைச்சர் விளக்கம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை