துரோக அரசியலில் பங்கெடுத்ததால் வைரமுத்துவுக்கு இப்படி நேர்ந்தது - திருமுருகன் காந்தி தாக்கு

துரோக அரசியலில் பங்கெடுக்கக் கூடிய நபாரக இருந்தார். அதனால், அவர் தனித்து விடப்பட்டுள்ளார் என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

Jan 13, 2018, 11:51 AM IST

துரோக அரசியலில் பங்கெடுக்கக் கூடிய நபாரக இருந்தார். அதனால், அவர் தனித்து விடப்பட்டுள்ளார் என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

எச்.ராஜாவின் கருத்துக்கள் கீழ்த்தரமனா கருத்துக்கள். அதாவது ஜனநாயகத் தன்மையோ, நாகரிகத் தன்மையோ, அரசியல் தன்மையோ கூட கிடையாது. மிக மிக கீழ்த்தரமான கருத்துகளை தொடர்ச்சிய கூறி வருகிறார்.

எச்.ராஜா அவரது கட்சியின் தேசிய செயலாளராக உள்ளார். அந்த கட்சியினுடைய தரமே, இந்த தரம் தான். கீழ்த்தரமான கட்சி. மிக மிக கீழ்த்தரமான கட்சி. எச்.ராஜா அதன் பிரதிநிதியாக இருக்கிறார். எச்.ராஜா பேசுவதை இந்த அரசு அங்கீகரிக்கிறது; பாஜக அங்கீகரிக்கிறது என்றாலே அதன் தராதரத்தை புரிந்துகொள்ள முடியும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டோவைவிட குறைவான வாக்குகளை பெற்றார்கள் என்றால், அந்த தரத்தைதான் மக்கள் கொடுத்திருக்கிறார்கள். இதில் முக்கியமானது எச்.ராஜா பேசுவதற்கு தகவலைக் கொடுக்கக் கூடியவர்கள். இதற்கான விவரங்களை கொடுக்கக் கூடியவர்கள்தான் முக்கியமான நபர்கள்.

அது ஆர்.எஸ்.எஸ்.இல் இருந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். மூன்று முறை இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம் அது. அவர்களின் தூண்டுதலின் பேரில் தான் எச்.ராஜா போன்றவர்கள் பேசுகிறார்கள்.

வைரமுத்து போன்றவர்கள் தனிநபர் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள் என்றால், ஒருபுறம் தமிழர்கள் இடத்தில் தன்னைப் பிரித்துச் சென்று தங்களை ஆரிய மயமாக்கக் கூடிய, இந்திய அரசின் நண்பனாக மாறக்கூடிய துரோக அரசியலில் பங்கெடுக்கக் கூடிய நபாரக இருந்தார். அதனால், அவர் தனித்து விடப்பட்டுள்ளார்.

அவர் அதிகாரத்தோடுதான் சேருவேன். மக்களோடு சேர மாட்டேன் என்று அவர் முடிவெடுத்தார். அதிகாரம் எப்பொழுது வேண்டுமானாலும் தூக்கி வைக்கும், எப்போது வேண்டுமானாலும் தூக்கிப்போட்டு மிதிக்கும். அதுதான் அவருக்கு நடந்திருக்கிறது.

தருண் விஜய் திருவள்ளுவரை ஏதோ பாராட்டினார் என்பதற்காக அவரை தூக்குவைத்து சுத்திக் கொண்டிருந்தார். குமரி புயலிலே ஒட்டுமொத்த மீனவர்கள் கைவிடப்பட்ட சூழ்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாராட்டி கொண்டாடினார்.

என்ன செய்தாலும் சூத்திரம், சூத்திரம் தான். அது வைரமுத்துவாக இருந்தாலும் சரி, திருமுருகன் காந்தியாக இருந்தாலும் சரி. என்னதான் குனிந்து கும்பிடு போட்டாலும், ஆரிய பார்ப்பன கும்பல் உங்களை சூத்திரர்களாகத்தான் நடத்துவார்கள்.

அப்படிப்பட்ட இடத்தில் நீங்கள் மீசையை முறுக்கிக்கொண்டு நிற்காமல், மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நிற்காமல் மன்னிப்பு கேட்டுள்ளீர்கள். அதுவந்து, நீங்கள் பேசுகின்ற தமிழுக்கு அவமானமாக இருக்கிறது. நீங்கள் பேசுகின்ற கருத்தில், சொல்லுகின்ற தத்துவத்தில் நின்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பேசுகின்ற தமிழன், ஒரு பொழுதும் வருத்தம் தெரிவித்து இருக்க மாட்டான்.

நீங்கள் தமிழை உங்களுடைய உணர்வாக பார்க்கிறீர்கள் என்றால், உங்களுடைய உணர்வில் தமிழ் இருக்கின்றதா எந்த சந்தேகம் எழுகின்றது. உங்களுடைய அடிபணிதல் என்பது கேள்விவுக்கு உள்ளாக்கி இருக்கிறது. உங்களுடைய பேச்சிற்கும் உங்களுடைய எழுத்திற்கும், உங்களுடைய நிலைப்பாட்டிற்கும், உங்களுடைய வருத்தத்திற்கும் பெரிய இடைவெளி இருப்பதை தமிழ் உலகம் உணர்ந்து கொண்டது.

ஆகவே, நாடகத்தன்மையிலான தன்மையை தான் இவ்வளவு நாள் பேசிக் கொண்டிருந்தீர்கள். அது உங்களுக்கு வணிக ரீதியாக பயனளித்திருக்கிறது என்ற காரணத்தால், பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.

எந்த தமிழை அடையாளமாக வைத்திருக்கிறீர்களோ, எந்த தமிழை உணர்வுப்பூர்வமாக பேசுகிறீர்களோ அந்த தமிழுக்காகவாவது உண்மையாக நின்றிருக்க வேண்டும். இது இல்லாமல் போனது துயரமாக இருக்கிறது. 

You'r reading துரோக அரசியலில் பங்கெடுத்ததால் வைரமுத்துவுக்கு இப்படி நேர்ந்தது - திருமுருகன் காந்தி தாக்கு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை