எச்ஐவி பாதித்த சாத்தூர் கர்ப்பிணிக்கு அரசு வேலை: எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் உறுதி

AIDS Control Association has confirmed Government Job for HIV-infected lady

by Isaivaani, Dec 27, 2018, 09:05 AM IST

எச்ஐவி கிருமி கலந்த ரத்தத்தை ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு அரசு வேலை வழங்கப்படும் என்று எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் அறிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியை சேர்ந்த வாலிபரின் உறவினர் பெண் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு வாலிபர் ரத்த தானம் வழங்கினார். ஆனால், அந்த ரத்தத்தை அப்பெண்ணுக்கு ஏற்றவில்லை. இந்த ரத்தம் வங்கியில் இருந்து கைமாறி சாத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 மாத கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது.

இதற்கிடையே, வெறிநாடு செல்ல முயன்ற அந்த வாலிபருக்கு உடல் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது தான் அந்த வாலிபருக்கு எச்ஐவி இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர் சிவகாசி ரத்த வங்கிக்கு உடனே சென்று நான் அளித்த ரத்தத்தை யாருக்கும் செலுத்த வேண்டாம் என்று கூறினார்.

ஆனால், அதற்குள் கர்ப்பிணிக்கு எச்ஐவி கிருமி கலந்த ரத்தத்தை ஏற்றப்பட்ட தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அந்த வாலிபருக்கு தெரியவந்ததை அடுத்து, மனவேதனையில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு போராடிய வாலிபருக்கு தற்போது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், எச்ஐவி கிருமி கலந்த ரத்தத்தை ஏற்றப்பட்ட கர்ப்பிணிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கூட்டு மருந்து சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு எந்த பாதிப்புமின்றி பிரசவம் நடைபெற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விரிவான அறிக்கைக்கு பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தகுதிக்க ஏற்ற வேலை வாய்ப்பு உள்ளிட்ட அவரது வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தவறு செய்த ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

You'r reading எச்ஐவி பாதித்த சாத்தூர் கர்ப்பிணிக்கு அரசு வேலை: எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் உறுதி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை