திருவாரூர் இடைத் தேர்தல் களம்: ஒரு முறை கூட வெல்லாத அதிமுக!

ADMK not won even one time in Thiruvarur Constituency

by Mathivanan, Jan 1, 2019, 15:42 PM IST

திருவாரூர் தொகுதியில் வரும் 28-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவும், அதிமுகவும் வேட்பாளர் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு களத்தில் குதிக்க தயாராகி விட்டன.

திருவாரூர் இதற்கு முந்தைய தேர்தல் முடிவுகள் பற்றி ஆராய்ந்தால் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்ட 1962 முதல் ஒரு முறை காங்கிரசும், 7 முறை திமுகவும், 5 தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கட்சியுமே வென்றுள்ளன.

அதிமுக ஒரு முறை கூட வென்றதில்லை என்பது தான் அக் கட்சிக்கு அதிர்ச்சிகரமான கூடுதல் தகவல். 1962-ல் திருவாரூர் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.

அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வென்றது. 1962-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அம்பிகாபதி வென்றார்.

1967 பொதுத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் தனுஷ்கோடி வெற்றி பெற்றார். 1971,77 தேர்தல்களில் திமுகவின் தாழை. மு. கருணாநிதி வெற்றி பெற்றார்.

1980, 84 தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் செல்லமுத்து வென்றார். 1989,91 தேர்தல்களிலும் மார்க்சிஸ்ட் கட்சியே வெற்றி பெற்று அக்கட்சியின் தம்புசாமி எம்.எல்.ஏ. ஆனார்.

அதன் பிறகு 1996 முதல் 2016 வரை நடந்த 5 தேர்தல்களிலும் தொடர்ச்சியாக திமுக வெற்றி பெற்ற தொகுதி திருவாரூர் ஆகும். 1996, 2001 தேர்தல்களில் அசோகனும், 2006-ல் மதிவாணனும் வென்றனர். கடந்த 2 தேர்தல்களில் திமுக தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வென்றார்.

1962-ல் தொகுதி உருவாக்கப்பட்டது முதல் திருவாரூர் தனித் தொகுதியாக இருந்தது. 2011ல் பொதுத் தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டது. அதிமுக இந்த தொகுதியில் ஒரு முறை கூட வெற்றி பெறாதது அக்கட்சியினருக்கு களத்தில் கலக்கம் தான்.

You'r reading திருவாரூர் இடைத் தேர்தல் களம்: ஒரு முறை கூட வெல்லாத அதிமுக! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை