பிட்காயின் சம்பளம்.!! ஜப்பான் நிறுவன ஊழியர்களுக்கு அடித்தது லாட்டரி...

Advertisement

இந்த ஆண்டு முதல், ஜப்பானிய நிறுவனமான ஜி.எம். குரூப், ஊழியர்களுக்கு பிட்காயின்களில் சம்பளம் அளிக்கவுள்ளதுநான்காயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு, தங்கள் சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை பிட்காயின்களாக பெற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 தற்போதைய பொருளாதார தொழில்நுட்பத்தின் மீதுள்ள  உலகளாவிய விருப்பம், இதுவரை இருந்ததைவிட அதிகமாக உள்ள நிலையில், இதுபோன்ற அறிவிப்பு என்பது, ஒரு சந்தைப் படுத்துதலுக்கான  நகர்வு என்று  பிட்காயின் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் சிக்கல்களும் உள்ளன. கடந்த வாரம் சரிந்த பிட்காயினின் மதிப்பு, மீண்டும் 50 சதவிகித்ததிற்கு மேல் எழுச்சி அடைந்துள்ளது. பணியாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் இதனால் ஏற்படக்கூடிய லாப நஷ்டங்கள் கண்டிப்பாக அதிகமாகவே இருக்கும்,

பிட்காயின் மூலமாக அளிக்கப்படும் சம்பளம் என்பது, ஒரு குறிப்பிட்ட நேரம் மற்றும் காலத்தில் உள்ள பணத்தின் மதிப்பை கணித்து வழங்க ஒப்புக்கொள்ளப்படுபவை.

தெளிவாக கூறவேண்டும் என்றால், பிட்காயினின் இன்றைய விலை 10 ஆயிரம் டாலர் என்று வைத்துக்கொள்வோம்

ஒரு பணியாளர் 1,000 டாலர் சம்பளத்துக்கு மட்டும் பிட்காயினை பெற்றுகொள்ளும்போது, அவருக்கு 0.1 பிட்காயின் மட்டுமே சென்றடையும்,

அவர் அந்த பிட்காயினை உடனடியாக விற்பனை செய்தால் மட்டுமே அவருடைய 1,000 டாலர் அவருக்கு கிடைக்கும்,

விற்பனை செய்யாமல் பிட்காயினை ஒரு நாளோ, ஒரு வாரமோ, ஒரு ஆண்டோ தேக்கி வைத்தால், 1,000 டாலர்கள் உள்ள அதன் மதிப்பு 5,000 டாலர்கள் வரைகூட செல்லலாம், அல்லது மதிப்பே இல்லாமல் கூட போகலாம்.

இதனால், பிட்காயின்கள் மூலமாக சம்பளம் அளிக்கப்படுவதால், மக்கள் சூதாட ஊக்குவிக்கப்படுவார்கள் என்று சிலர் கூறுகின்றனர்.

இன்சீட் வணிகப்பள்ளியில் பேராசிரியராக உள்ள மஸ்ஸிமோ மசா இவ்வாறு கூறுகிறார்,

"ஒரு பணியாளர் பிட்காயின்களால் சம்பளத்தை வாங்குகிறார் என்றால், அவருக்கான லாட்டரி சீட்டு கிடைக்கிறது என்றுதான் அர்த்தம், அவர்கள் அந்த விளையாட்டில் பங்கேற்கிறார்கள்,

இந்த பிட்காயின்களின் விலை உயரும், மதிப்பு உயரும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பதால் அதை ஒரு சூதாட்டமாகவே ஆடவேண்டும் என்பதை பணியாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

பிட்காயின்களின் விலை தொடர்ந்து உயர்வதால், சம்பளத்தை பிட்காயின்களாக மாற்றும் தளமான பிட்வேஜ்ஜில், இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான புதிய பயணாளர்கள் இணைந்துள்ளனர்.

"இந்த காலத்தில், பலரும் இதில் பங்கெடுக்க விரும்புகிறார்கள், சில நேரங்களில் அவர்களின் முழு சம்பளமும் பிட்காயின்களாக அளிக்கப்படுகின்றன" என்கிறார், பிரிட்வேஜ் நிறுவனத்தின் இயக்குநர் ஜானத்தன் செஸ்டர்.

இந்நிறுவனம், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில், இந்த ஆண்டு 20 ஆயிரம் பணியாளர்களின் முப்பது மில்லியன் மதிப்புள்ள சம்பளப் பணத்தை இவ்வாறு மாற்றியளித்துள்ளது.

இதில், கூகுள், பேஸ்புக், அமெரிக்க கடற்படை பணியாளர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது

உலகில் எங்கு இருந்தாலும், அப்போது, பிட்காயின்களின் விலை என்னவோ, அதற்கு ஏற்ப பணியாளர்கள் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

பங்குசந்தைகளில், எவ்வாறு பணியாளர்கள் தங்களின் முதலீட்டுக்கு வருமான வரி செலுத்த வேண்டுமோ, அவ்வாறு பிட்காயின்களிலும், தங்களின் பணம் எவ்வளவு லாபமீட்டியுள்ளதோ அதற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும்.

கிரிப்டோ பணங்களில் பணியாற்றும் சில நிறுவனங்கள், பல ஆண்டுகளாக தங்களின் பனியாளர்களுக்கு பிட்காயினில் சம்பளம் அளித்து வருகின்றனர்.

சிங்கப்பூரை சேர்ந்த டென் எக்ஸ் நிறுவனத்தில், பனியாளர்களின் அடிப்படை சம்பளம் மட்டுமே அவர்களின் வங்கிக் கணக்கில் போடப்படுகிறது. கூடுதல் தொகைகள், அந்நிறுவனம் உருவாக்கும் பே டோக்கன்களாகவே அளிக்கப்படுகின்றன.

இந்த டோக்கன்களை எந்த டிஜிட்டல் சந்தைகளும் மாற்ற முடியும். கடந்த ஜூன் மாதம் அறிமுகமான இந்த பணத்தால், அந்நிறுவனம் 80 மில்லியன் டாலர்கள் ஈட்டியுள்ளது.

தன் நிறுவனமே சொந்தமாக ஒரு பணத்தை உருவாக்கும்போது, பிட்காயின்களில் சம்பளம் பெறுவது என்பது அர்த்தமற்றதாகும் என்கிறார், டென் எக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஜூலிஅன் ஹாஸ்ப்.

கூடுதல் தொகையையும் தாண்டி, அடிப்படை சம்பளத்திலும் ஒரு பகுதியை டோக்கன்களாக பெறுகிறார், டென் எக்ஸ் சமூக மேலாளரான மைக் ஃபெர்ரர்.

இதில் சிக்கல் அதிகம் என்பதை ஒப்புக்கொள்ளும் இவர், தன்னால் என்ன முடியுமோ அதில் மட்டுமே முதலீடு செய்வதாக கூறுகிறார்இத வாசிச்சி முடிக்கும்போது நீங்க என்ன யோசிக்கிறீங்கன்னு தெரியுது.

நாமளும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி ருபாய் நோட்டயே சம்பளமா வாங்கிறதுன்னு தான யோசிக்கிறீங்க..? நம்ம கைல இருந்த 500, 1000 செல்லாதுன்னு சொல்லும்போது நம்ம மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிச்சி.!

பேங்க்ல இருந்த நம்மளோட பணத்தை வெளிய எடுக்க எவ்ளோ கஸ்டப்பட்டோம்..! இப்போ அதெல்லாம் இல்லாம நிம்மதியா இருக்கோமேன்னு சந்தோஷப்படுறதோட நிறுத்திக் கிட்டா... வாழ்க்கை  டென்ஷன் இல்லாம போயிடும்.

'பிட்காயின்ல சம்பளம் வாங்கலயா'ன்னு யாராவது கேட்டா.. சூப்பர் ஸ்டார் சொல்ற மாதிரி  "அதுக்கெல்லாம் வேற ஆட்கள் இருக்காங்க"ன்னு சொல்லிட்டு போய்கிட்டே இருங்க பாஸ்...

நமக்கு ஏன் வீண் வம்பு...!!!

Advertisement
/body>