கண் இமைகள் உறையும் அளவிற்கு ரஷ்யாவில் கடும் பனிப்பொழிவு

Advertisement

மாஸ்கோ: ரஷ்யாவில் வரலாறு காணாத அளவிற்கு, கண் இமைகள் கூட உறையும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பூமியில், மகிவும் குளிரான பகுதியில் ஒன்று ஒய்ம்யாகாவ். இங்கு, சாதாரணமாகவே பனிப்பொழிவு இருக்கும் நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மைனஸ் 67 டிகிரி வெப்பநிலை பதிவாகியது. இதனால், அங்கு பள்ளிகளுக்கு அன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும், குழந்தைகளை வெளியில் அனுப்பாமல் பத்திரமாக வீட்டிற்குள் வைத்திருக்கும் படியும் பெற்றோர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
இதேபோல், கிழக்கு மாஸ்கோவில் 5,300 கிலோ மீட்டர் பரப்பில் சுமார் 10 லட்சம் பேர் வசிக்கும் யகுஷியா என்ற பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக உறை பனியில் சிக்கி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் அடர்த்தியான உடை அணிந்திருந்ததால் உயிர் தப்பினர்.

இந்நிலையில், அந்நாட்டு ஊடகம் ஒன்று இந்த உறைபனியிலும் செல்பி எடுத்துக்கொண்ட பெண்கள் சிலரது புகைப்படம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளனர். இதில், அந்த பெண்களின் கண் இமைகள் உறையும் அளவிற்கு பனி இருப்பதை படத்தில் பார்க்க முடிகிறது.

Advertisement

READ MORE ABOUT :

/body>