வளைகுடா தமிழர் குழு சார்பில் தகவல் தொழில்நுட்பம் குறித்த இலவச கல்விப் பயிற்சி

May 16, 2018, 19:29 PM IST

வளைகுடா தமிழர் குழு (Bay Area Tamils) சார்பில், தகவல் தொழில்நுட்பம் குறித்த கல்விப் பயிற்சி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர்.

தகவல் தொழில்நுட்பம் நிறுவனங்களில் பணிபுரிய விரும்புவோருக்கான கல்வி சேவையை, வளைகுடா தமிழர் குழு ஏற்பாடு செய்தது. பைதான் கற்றுகொள்வோர் முனையம் (Phython tech meet up) என்ற பெயரில் இந்த கல்வி சேவை பயிற்சி நடைபெற்றது. இதில், மொத்தம் 30 பேர் கலந்துக் கொண்டனர். இவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் நிறுவனங்களில் அதிகளவில் பயன்படுத்தும் பைதான் (Phython Software) என்ற மென்பொருள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியை, பைதான்(Phython) தகவல் தொழில்நுட்ப நிறுவன வல்லுநர்கள் மூன்று மணி நேர பயிற்சியை அளித்தனர். பயிற்சியின் ஒரு பகுதியாக திரையின் மூலம் விவரித்தலும் நடைபெற்றது. இதுமட்டும் இல்லாமல், பயிற்சியை மேற்கொண்டவர்களுக்கு அவர்கள் எடுத்து வந்த லேப்டாப்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டது.

இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக தொண்டு நிறுவனம் ஒன்றிற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, இதில் பங்கேற்ற குழந்தைகள் புதுப்பிப்பு மையத்தை (Child Innovation Center) சேர்ந்த சாந்தி பலராமன், நேவார்க் பகுதியில் நடத்தி வரும் குழந்தைகளுக்கான மாற்று கல்வி குறித்து விவரித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நபர் ஒருவர், “தொழில்நுட்ப மக்களை ஒருங்கிணைக்க இதுபோன்ற பயிற்சிதான் சரியான வழி. தயவு செய்து மேன்மேலும் சென்று தமிழ் தொழில்நுட்ப மக்களை ஒருங்கிணைக்க வேண்டும்” என்றார் நெகிழ்ச்சியாக. https://www.facebook.com/groups/bayareatamils/

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

You'r reading வளைகுடா தமிழர் குழு சார்பில் தகவல் தொழில்நுட்பம் குறித்த இலவச கல்விப் பயிற்சி Originally posted on The Subeditor Tamil

More Velinaduval inthiyargal News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை