மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட்: விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாம்கட்ட லீக் போட்டி #MTBC

அமெரிக்காவில் மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட்டின் இரண்டாம் கட்ட லீக் போட்டி நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட 54 அணிகளுக்கு இடையே 27 போட்டிகள் விறு விறுப்பாக நடைபெற்றன.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான போட்டி மே மாதம் முதல் வாரம் தொடங்கியதை அடுத்து, ஆகஸ்டு மாதம் கடைசி வாரம் வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், இதற்கான முதல் லீக் போட்டி கடந்த 5ம் மற்றும் 6ம் தேதிகளில் நடைபெற்றது. மொத்தமுள்ள 54 அணிகளுக்கிடையே 27 போட்டிகள் நடைபெற்றன. இதில், எம்என் மாவெரிக்ஸ் அணியை சேர்ந்த யசோதா பப்பிநிதி, குமின்ஸ கிரிக்கெட் கிளப் அணியை சேர்ந்த முரளி ரவீந்திரன், இந்தியன் நைட்ஸ் அணியை சேர்ந்த ஆதித்யா பைல்லா, டேர் டெவில்ஸ் அணியை சேர்ந்த சுமித் மஹாகுத் உள்ளிட்ட வீரர்கள் ரன்களை குவித்து முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.

இந்நிலையில், இரண்டாம் கட்ட லீக் போட்டி கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதிலும், முதல் லீக் போட்டியில் விளையாடிய 54 அணிகளும் மீண்டும் களமிறங்கின. இரண்டு நாட்களில் 27 போட்டிகள் விறு விறுப்பாக நடைபெற்றன. லீக் போட்டியின் முடிவில் முதல் 32 இடத்தில் உள்ள அணிகள் அடுத்தகட்ட ஆட்டத்திற்கு தேர்வு செய்யப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் கட்ட லீக் போட்டியில் விளையாடி ரன்களை குவித்த வீரார்களின் பட்டியல் இதோ:

மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு போட்டிகளின் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களில், எம்என் மெவெரிக்ஸ் அணியை சேர்ந்த யசோதா பாபினிதி 717 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.
இவரை தொடர்ந்து, கும்மின்ஸ் கிரிக்கெட் கிளப் அணியை சேர்ந்த முரளி ரவீந்திரன் மொத்தம் 449 புள்ளிகள் குவித்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இவர்களை தொடர்ந்து, நெருப்பு அணியை சேர்ந்த பயாஸ் சலிஹ் 400 புள்ளிகள் எடுத்து மூன்றாம் இடத்திலும், டேர் டெவில்ஸ் அணியை சேர்ந்த சுமித் மஹாகுத் 374 புள்ளிகள் குவித்து நான்காம் இடத்திலும், குஜ்ஜூ XI அணியை சேர்ந்த ஹார்திக் பண்டித் 360 புள்ளிகள் எடுத்து ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

இதேபோல், குழுக்களின் கீழ் விளையாடும் அணிகளின் அடிப்படையில் முதலிடத்தில் இருக்கும் அணிகள் குறித்து பார்ப்போம்..

குரூப் ஏ:
இந்தியன் கோல்ட்ஸ் அணி மற்றும் மின்னசோட்டா இந்தியன்ஸ் அணிகள் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளன.

குரூப் பி:
இந்தியன் நைட்ஸ், நெருப்பு மற்றும் தேசி பண்டிட்ஸ் அணிகள் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளன.

குரூப் சி:
குமின்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் டைட்டான்ஸ் அணிகள் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளன.

குரூப் டி:
விக்டர்ஸ் மற்றும் குஜ்ஜூ XI ஆகிய அணிகள் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளன.

குரூப் இ:
எம்என் மாவெரிக்ஸ் அணி 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றன.

குரூப் எப்:
வி ராக், மைட்டி மின்ஸ், டவுன்டவுன் ஸ்டிரைக்கர்ஸ், ரைசிங் வாரியர்ஸ் உள்ளிட்ட அணிகள் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளன.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

Advertisement