H4-EAD Visa தொடர அமெரிக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை!

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஹெச்-1 பி விசா பெறுவார்கள். ஹெச்-1 பி விசா வைத்திருப்பவர்களின் கணவர் அல்லது மனைவிக்கு ஹெச்-4 விசா வழங்கப்படும்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா காலத்தில் ஹெச்-4 விசா வைத்திருப்பவர்கள், அமெரிக்காவில் பணியாற்ற சட்டரீதியாக ஒப்புதல் வழங்கப்பட்டது. ஹெச்-4 ஈஏடி என்ற இந்த பணியாற்றும் உரிமை கொண்ட விசாவினை வரும் ஜூன் மாதம் முதல் ரத்து செய்வதற்கு தற்போதைய அதிபரான டொனால்டு ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார்.

ஒபாமா ஆட்சிக்காலம் முதல் டிசம்பர் 2017 வரை 1,26,853 பேர் ஹெச்-4 ஈஏடி விசா பெற்றுள்ளனர். இந்த விசா வைத்துள்ளவர்களில் 93 விழுக்காடு எண்ணிக்கை இந்தியர்கள். ஹெச்-4 ஈஏடி ரத்து செய்யப்பட்டால் ஏறத்தாழ 70,000 பேர் பாதிக்கப்படுவார்கள்.

“அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும். ஹெச்-4 ஈஏடி விசா வைத்துள்ளவர்களின் பங்களிப்பு அமெரிக்க பொருளாதாரத்தில் முக்கியமானது. இவ்விசா வைத்துள்ளவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பதால், அவர்கள் தன்னம்பிக்கை பெறும்வகையில், திறன்கள் பயன்படுத்தப்படவேண்டும். இவ்விசா வைத்துள்ளவர்களின் பெரும்பாலோனோர் நிரந்தர குடியுரிமை பெறக்கூடிய காலகட்டத்தை தாண்டி விட்டனர்.

நடைமுறையில் தேக்கம் இல்லாவிட்டால், முன்பே இவர்கள் நிரந்தர குடியுரிமை பெற்றிருப்பர். அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் குடிபுகல் நடைமுறைகள் சீராக்கப்பட வேண்டும், ஆனால், உயர்ந்த திறமை கொண்டவர்களை நாட்டு முன்னேற்றத்துக்கு பயன்படுத்திக் கொள்வதில் கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைப் போன்று முந்திக்கொள்ள வேண்டும்" என்று அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை செயலர் கிறிஸ்ட்ஜென் நெய்ல்சனுக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்திய அமெரிக்கரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரமீளா ஜெயபால் முயற்சியின்பேரில் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி ஆகிய இரு கட்சிகளின் 130 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

Advertisement