ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அமெரிக்க தூதரகங்களில் மனு!

May 22, 2018, 20:00 PM IST

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள தூதரகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் தமிழர்கள் கையெழுத்திட்ட மனுவை குளேபல் தமிழ் டயஸ்போரா அமைப்பு சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, அம்மாவட்ட மக்கள் கடந்த நூறு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நூறாவது நாளான மே 22ல் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரிய ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றபோது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர், போராட்டக்காரர்களை போலீசார் தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், அதிகாரப்பூர்வமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக, தூத்துக்குடி மக்கள் ஆதரவு தெரிவிக்கும் வகையில், அமெரிக்கா வாழ் தமிழர்களும் சுமார் 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நூறாவது நாளான மே 22ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை முன்மொழிந்து, அமெரிக்க வாழ் தமிழர்களும் மே 22ம் தேதி போராட்டம் நடத்த உள்ளனர்.

இதற்கிடையே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் குளோபல் தமிழ் டயாஸ்போரா அமைப்பை சேர்ந்த ஸ்ரீவித்யா, அருண் மணியன், விஜயன், வெங்கட் ராமன், வெங்கடேஷ் ஆகியோர் கனடா தூதரகத்தின் துணைத்தூதர் டி.பி.சிங்கை சந்தித்து மனு தாக்கல் செய்தார். அப்போது, தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலையைப் பற்றி சிங்கிற்கு எடுத்துரைத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட டி.பி.சிங் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இதேபோல், கடந்த ஏப்ரம் மாதம் 8ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரொக பேரணி நடத்திய 100க்கும் மேற்பட்டோரின் கையெழுத்து அடங்கிய மனுவை சான்பிரான்சிஸ்கோ தூதரகத்தின் இந்திய துணை பொது ஆலோசகர் ரோகித் ரத்திஷிடம் கேசவ் மற்றும் ஸ்டீபன் மனுவை தாக்கல் செய்தனர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அளிக்கப்பட்டுள்ள இந்த மனுவை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் சேர்க்க வேண்டும் என்றும் ரோகித் ரத்திஷிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நூறாவது நாள் போராட்டத்திற்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் தயாராகி உள்ள நிலையில், தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

இந்த கலவரத்தில் இதுவரை 8க்கும் மேற்பட்டோர் பலியான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படி ஓர் சூழலுக்கு பிறகு அமெரிக்கா வாழ் தமிழர்கள் நடத்தும் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அமெரிக்க தூதரகங்களில் மனு! Originally posted on The Subeditor Tamil

More Velinaduval inthiyargal News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை