ஹேக்கிங் மூலம் மதிப்பெண்ணை மாற்றிய மாணவன்!

Advertisement

இந்திய- அமெரிக்க மாணவன் ஒருவன் தான் கல்லூரி பாடங்களில் ஃபெயில் ஆன காரணத்தால் கல்லூரி வளாக கணினி மையத்தை ஹேக் செய்து தனக்குத் தானே பாஸ் மார்க் போட்டுக்கொண்டுள்ளான்.

இதனால் தற்போது அவனுக்கு நீதிமன்றம் தண்டனைக் காலத்தை அறிவித்து அவனது பேராசிரியர்களிடம் மன்னிப்பும் கோர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வருண் சார்ஜா என்ற இருபது வயது மாணவன், படிக்கும் காலகட்டத்தில் இருப்பதால் சிறைத்தண்டனை அளிக்கப்படாமல் ஒன்றரை ஆண்டுகள் சோதனைக் காலத்தில் நீதிமன்ற பார்வையில் இருக்க வேண்டும் என்றும் மீறினால் 18 மாதம் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மொத்தம் 18 கடுமையான குற்றங்களின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட மாணவன், இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் புரிந்தவனாக நிரூபிக்கப்பட்டுள்ளான். அதாவது, அடையாளம் திருட்டு மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கணினி செயல்பாடுகள் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபனம் ஆகியுள்ளது.

கடந்த 2016-17 கல்வி ஆண்டில் கான்சாஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் மாணவனாக வருண் சேர்ந்துள்ளான். 18 குற்றங்களில் இரண்டைத் தவிர மற்ற அனைத்திலிருந்தும் வருண் விடுவிக்கப்பட்டுள்ளான். கல்லூரி காலத்திலேயே நல்ல பொறியியலாளராக வர வேண்டும் என எண்ணிய வருண் பாடங்களில் தோல்வியுற்றதால் பெற்றோரிடம் சொல்ல வருத்தப்பட்டு கல்லூரி கணினியை ஹேக் செய்து இப்போது பெரும் சிக்கலில் மாட்டிகொண்டுள்ளான்.

மேலும் நீதிமன்றத்தில் இனிமேல் இதுபோன்று ஹேக் செய்வது இல்லை என வருண் உறுதி கூறி தனது பேராசிரியர்களிடமும் மன்னிப்பு கேட்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தான்.

Advertisement
/body>