பிஎம்டபிள்யூ வகைகளில் நடுத்தரமான ஸ்போர்ட்ஸ் ரக ரீ மாடலாக அறிமுகமாகியுள்ளது பிஎம்டபிள்யூ எக்ஸ்4.
பலரும் வெறுக்கும் நிலையில் உள்ள மாடல்களின் வரிசையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்4 அறிமுகம் ஆனாலும், எந்த ஒரு கார் உற்பத்தியாளரும் எட்டத் தயங்கும் ஒரு வரிசையை பிஎம்டபிள்யூ எட்டியுள்ளது.
ஒரு இரண்டாம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ் 3 ரக கார் ஆக அறிமுகம் ஆனாலும் முதன்முதலில் கடந்த 2014-ம் ஆண்டு களம் கண்ட போது இந்த எக்ஸ் 4 ஒரு எக்ஸ் 6 ரகமாகவே உருவம் ஏற்றிருந்தது. அன்றைய காலகட்டத்தில் 2 லட்சம் கார்கள் உலகம் எங்கும் விற்பனை ஆனது. ஆனால், அறிமுகமான வெறும் 4 ஆண்டுகளிலேயே ரீ மாடல் செய்யப்பட்ட புதிய உருவம் ஏற்று மீண்டும் களம் இறங்கியுள்ளது பிஎம்டபிள்யூ எக்ஸ்4.
முற்றிலும் மாறுபட்ட புதிய வடிவமைப்புடன் மிளிர்கிறது எக்ஸ் 4-ன் பின்பக்க ஒளி விளக்குகள். முந்தைய 2014 மாடல் எக்ஸ் 4 காரை விட தற்போது வெளிவந்துள்ள எக்ஸ்4 அத்தனை அம்சங்களிலும் மாறுபட்டு, புதுமையுடன் வரவேற்கத்தகதாக வெளிவந்துள்ளது.
ஆக, தற்போது களம் கண்டாலும் வாடிக்கையாளர் பயன்பாட்டுகு 2019-ம் ஆண்டின் துவக்கத்தில் சுமார் 60 முதல் 65 லட்சம் ரூபாய் வரையில் விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.