இனி ஸ்மால் பஸ்களில் கண்டக்டர்கள் இல்லை: தமிழக அரசு அறிவிப்பு

by Isaivaani, Jul 3, 2018, 19:27 PM IST

சென்னையில் இயங்கும் ஸ்மாஸ் பஸ்களில் இனி கண்டக்டர்கள் கிடையாது என்றும் அதற்கு மாற்று வழி செய்யப்ப்டடுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 2013ம் ஆண்டு முதல் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் ஸ்மால் பஸ்கள் விடப்பட்டது. சென்னை மாநகர போக்குவரத்து கழக கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 200 ஸ்மால் பஸ்கள் விடப்பட்டன. இந்த பேருந்துகள் சாலை தெருக்கள் வழியாகவும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் மூலம், பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த பேருந்துகளுக்கு 2 ஓட்டுனர் மற்றும் 2 கண்டக்டர்கள் ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், ஸ்மால் பஸ்கள் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயீரம் மட்டுமே வருவாய் வந்தது. ஆனால், பராமரிப்பு செலவு, டீசல் செலவு, டிரைவர், கண்டக்டர் சம்பளம் உள்ளிட்ட அனைத்து செலவுகளால் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, கண்டக்டர்கள் இல்லாமல் ஸ்மால் பஸ்கர் இயக்குவது குறித்து ஆலோசனை செய்தனர். இதில், கண்டக்டர்கள் இல்லாமல் ஸ்மால் பஸ்களை இயக்க முடிவு செய்தனர்.
மேலும், ஸ்மால் பஸ்களில் தானியங்கி எந்திரம் மூலம் டிக்கெட் வழங்கும் வசதியை பொருத்தி ஸ்மால் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு, சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி ஆறுமுகம் நயினார் நடைமுறைக்கு இது ஒத்துவராது என எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

You'r reading இனி ஸ்மால் பஸ்களில் கண்டக்டர்கள் இல்லை: தமிழக அரசு அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை