லூக்கை காணாமல் ஜெர்மனி தம்பதியர் பரிதவிப்பு!

Advertisement

ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டெஃபன் காக்ரா. மனைவி மற்றும் செல்லப்பிராணியான லூக் என்கிற நாயுடன் ஜெர்மெனியிலிருந்து காரிலேயே இந்தியாவுக்கு வந்தனர். . சென்னைக்கு சு வந்த அவர்கள் நாயை காரில் கட்டி வைத்து விட்டு, மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்த போது, நாயை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஸ்டெஃபன் காக்ரா. மெரினா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

நாயை காணாமல் ஜெர்மன் தம்பதி தவிப்பு

லூக் ஒரு முறை பாம்பிடம் இருந்து அவர்களை காப்பாற்றியதாகவும் அதை கண்டுபிடித்தவர்களுக்கு சன்மானம் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தங்கள் செல்ல நாயை கண்டுபிடிப்ப வாட்ஸப் குழு ஒன்றையும் தொடங்கினர். வாட்ஸப் குழுவில், மெரினா கடற்கரையில் இருந்து நாயை ஆட்டோவில் யாரோ கடத்தி சென்றதை பார்த்தாக தகவல் வந்துள்ளது. போலீசாரும் லூக்கை தேடி வருகின்றனர்.

Advertisement
/body>