அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற ஒதுக்கீடு 45 சதவீதம் உயர்வு

by Isaivaani, Jan 12, 2018, 13:10 PM IST

வாஷிங்டன்: அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற கிரீன் கார்டு ஒதுக்கீடு 45 சதவீதம் உயர்த்துவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில், நிரந்தரமாக தங்குவதற்கான குடியுரிமை பெற வழங்கப்படுவது கிரீன் கார்டு. இந்த கிரீன் கார்டை பெறுவதற்கு, தொழில்நுட்பத் துறையினர், மருத்துவர்கள் என பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் போட்டிபோட்டு நிற்கின்றனர். இதனால், கிரீன் கார்டு கிடைப்பதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகிறது.

இதனால், தகுதியின் அடிப்படையில் குடியேற்ற உரிமை வழங்கவும், வருடாந்திர கிரீன் கார்டு ஒதுக்கீட்டை 45 சதவீதம் அளவிற்கு அதிகரிக்கவும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதித்துவ சபையில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி ஜனாதிபதி டிரம்பால் கையெழுத்திடப்பட்டு சட்டமாகிவிட்டால், அது பன்முக விசா திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும். குடியேற்ற அளவை தற்போதைய 10 லட்சத்து 5 ஆயிரம் என்பது, ஆண்டுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் என்ற அளவுக்கு குறைக்கும்.

அமெரிக்காவின் எதிர்காலத்தை பாதுகாக்கும் சட்டமசோதா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, தற்போது ஆண்டுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கிரீன் கார்டுகள் வழங்குவதை 1 லட்சத்து 75 ஆயிரம் என்ற அளவுக்கு உயர்த்த வகை செய்கிறது. இதன்மூலம், அமெரிக்கா மற்றும் சீனாவை சேர்ந்த தொழில்நுட்பத் துறையினர் பலன் அடைய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்காக 5 லட்சம் இந்தியர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

You'r reading அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற ஒதுக்கீடு 45 சதவீதம் உயர்வு Originally posted on The Subeditor Tamil

More Velinaduval inthiyargal News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை