100வது செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை

by Isaivaani, Jan 12, 2018, 11:59 AM IST

பெங்களூர்: இந்தியாவின் 100வது செயற்கைக்கோளை இன்று விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

உலகில் இருக்கும் பல நாடுகளின் செயற்கைக்கோள் தற்போது இஸ்ரோ அமைப்பின் மூலம் ஏவப்படும் அளவிற்கு நாம் முன்னேறி வருகிறோம். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி&40 மூலம் இன்று 100வது செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட், கார்டோசாட்&2 செயற்கைக்கோளைத் தாங்கிச் சென்று இருக்கிறது. இது இந்தியாவின் 100வது செயற்கைக்கோள் ஆகும்.
இதன் எடை 710 கிலோ ஆகும். இதில், நிறைய நேனோ மற்றும் மைக்ரோ செயற்கைக்கோள்கள் இருக்கிறது. இதன் மொத்த எடை, 1323 கீலோ ஆகும்.

சரியாக இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி சி&40 ஏவப்பட்டது. இதற்கான கவண்டவுன் நேற்று அதிகாலை முதல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்எல்வி சி&40 ராக்கெட் மூலம், கனடா, கொரியா, பிரிட்டன், பிரான்ஸ, அமெரிக்கா, இந்தியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டது.

இதில், மொத்தமாக 31 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டு உள்ளன.
பூமியின் இயற்கை வளங்களை கண்காணிப்பதற்காக மேலும், இதில் கார்டோசாட் &2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. இதில் நிறைய புதிய தொழில்நுட்பங்கள் இடம்பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading 100வது செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை