பேஷன் நிகழ்ச்சியில் கேட்வாக் செய்த மூன்று மார்பகங்கள் கொண்ட பெண்கள்!

மிலனில் நடைப்பெற்ற வார பேஷன் நிகழ்ச்சியில், மூன்று மார்பகங்கள் கொண்ட பெண்கள் கேட் வாக் செய்து பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.

அவர்களின் இரு இயற்கை மார்பகங்களுக்கு மத்தியில் பிராஸ்தெடிக் மார்பகம் எனப்படும் செயற்கை மார்பகம் ஒன்றினை பொருத்தி, அவர்கள் இந்த பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யத்தை அளித்தனர்.

இத்தாலியை சேர்ந்த பிரபல பேஷன் பிராண்டான GCDS (God Can’t Destroy Streetwear) நிறுவனத்தை 2015ஆம் ஆண்டில் குலியானோ மற்றும் ஜியார்டனோ சகோதரர்கள் உருவாக்கினர்.

இயற்கையின் மீது பேரார்வம் கொண்ட இந்த சகோதரர்கள், மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டினால், உலகம் முழுவதும் மிகப்பெரிய சுற்றுச் சூழல் பாதிப்பு அடைந்து வருவதை உலகிற்கு தங்களுக்கே உரித்தான பேஷன் துறையின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.

கடந்த சனியன்று நடைப்பெற்ற மிலன் பேஷன் நிகழ்ச்சியில், பிராஸ்தெடிக் பொருத்தப்பட்டு, மூன்று மார்பகங்கள் கொண்ட பெண்களாக காட்சிப்படுத்தினர். இயற்கைக்கு நடுவே செயற்கையாக பிளாஸ்டிக்கின் பயன்பாடு, நமக்கு அளித்து வரும் அசெளகரியங்களை விவரிக்கவே, இப்படி ஒரு வித்தியாசமான வினோத முயற்சியில் இதன் வடிவமைப்பாளர்கள் இறங்கியுள்ளனர்.

எப்படி வந்தது இந்த ஐடியா?

அரிய நோயால் பாதிக்கப்பட்டு மூன்று மார்பகங்கள் கொண்ட பெண்கள் உலகில் இன்னமும் வாழ்ந்து வருவதாக பல கதைகள் உள்ளது. சிலர், யூடியூபில், தங்களுக்கு மூன்று மார்பகங்கள் உள்ளதாக பதிவிட்டும் வருகின்றனர். அவை, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்றும், நிஜமென்றும் பல்வேறு விவாதங்கள் உலகளவில் நடைபெற்றே வருகின்றது.

அர்னால்ட் ஸ்வாசினேக்கர் நடிப்பில் 1990ஆம் ஆண்டு வெளியான ‘டோட்டல் ரீகால்’ படத்தில் நடிகை லிசியா நாஃபை மூன்று மார்பகங்கள் கொண்ட பாலியல் தொழிலாளி கதாபாத்திரமாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். டோட்டல் ரீகால் படத்தில் வரும் அந்த கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த தீமை உருவாக்கியதாக இதன் வடிவமைப்பாளர்களில் ஒருவரான குலியானோ தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஆடைகள் கொண்டும் மாடல் அழகிகள் ஒய்யார நடை நடைந்து பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தனர்

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கவும் சர்வதேச நாடுகள் பல விதமான வழிகளை நடைமுறை படுத்தி வரும் நிலையில், பேஷன் ஷோ நிகழ்ச்சியில் இப்படி ஒரு விழிப்புணர்வு நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!