இது என்னவென்று தெரிகிறதா உங்களுக்கு?

இது என்னவென்று தெரிகிறதா உங்களுக்கு

by Vijayarevathy N, Sep 25, 2018, 18:12 PM IST

58 கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த விசித்திர உயிரினத்தின் கால்தடம் ரஷ்யாவில் இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகில் பல உயிரினங்கள் தோன்றி அதற்கான ஆயுட்காலம் முடிந்த பிறகு இறந்து போவது உலக நீதியாக உள்ளது. அந்த வகையில் சுமார் 58 கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கால்தடம் கண்டறியப்பட்டுள்ளது.  

ரஷ்யாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள வெள்ளை கடல் பகுதியில் இந்த உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டது. இவை டிக்கின்சோனியா என அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகளில் இந்த டிக்கின்சோனியா உயிரினத்தின் தடங்கள் ஏற்கனவே இருந்தாலும், ரஷ்யாவில் இருப்பது பழமையானதாக கருதப்படுகிறது.

இது கால்தடம் என கூறப்பட்டாலும், இது அந்த உயிரினத்தின் மொத்த உடல்தடம் ஆகும். இது 58 கோடி வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தது என கணிக்கப்பட்டுள்ளதால், ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading இது என்னவென்று தெரிகிறதா உங்களுக்கு? Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை