டியர் பிரைம் மினிஸ்டர்... இதை எங்களுக்கு கற்றுக்கொடுங்கள் - இம்ரான் கானை விளாசிய ராம் கோபால் வர்மா!

Ram Gopal Varma slams Pakistan PM Imran Khan

Feb 21, 2019, 21:22 PM IST

காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பின் மனித வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் படை வீரர்கள் 40 பேர் வீர மரணமடைந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானை குற்றம் சாட்டி வருகிறது இந்தியா.

இந்நிலையில் தாக்குதல் சம்பவம் நடந்து 5 நாட்களுக்குப் பின் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில், ‘எந்த ஆதாரமும் இல்லாமல் புல்வாமா தாக்குதல் குறித்து பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சுமத்துகிறது. தீவிரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும்நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். பாகிஸ்தான் மீது வீண்பழி சுமத்தி போர் தொடுக்க இந்தியா நினைத்தால் எந்த தயக்கமுமின்றி பதிலடி கொடுக்க தயார்" எனப் பேசியிருந்தார். ஏற்கனவே ஆறாத வடுவாக மாறியுள்ள வீரர்கள் இழப்பை கொச்சைப்படுத்தும் வகையில் இந்தப் பேச்சு அமைந்துள்ளதாக எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில் இம்ரான் கானின் பேச்சுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா. அவரின் ட்விட்டர் பதிவில், “டியர் பிரைம் மினிஸ்டர்.... பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்னைகளும் தீர்த்துவிடலாம் என்றால் நீங்கள் மூன்று முறை திருமணம் செய்துக்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பாட்டிருந்திருக்காது. உங்கள் மீது ஒருவர் ஆர்.டி.எக்ஸ் பாம் வீச வரும் சமயத்திலும் தடுக்காமல் எப்படி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என எங்கள் அப்பாவி இந்தியர்களுக்கு பாடம் எடுங்கள் சார். அப்படி எடுத்தால் உங்களுக்கான டியூஷன் பீஸையும் நாங்கள் கொடுக்கிறோம்.

உங்கள் பாகிஸ்தானில் ஒசாமா வாழ்ந்தார் என அமெரிக்காவுக்கு தெரிந்துள்ளது. ஆனால் உங்கள் நாட்டில் யார் வாழ்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியவில்லை. பாகிஸ்தான் உண்மையிலேயே ஒரு நாடு தானா? நான் ஒரு அப்பாவி இந்தியனாக இதை கேட்கிறேன். உங்களின் பாகிஸ்தானில் தான் ஜெயிஷ் இ முகமது, லக்‌ஷர் இ தொய்பா, தாலிபான், அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகள் இருக்கிறது என யாரும் என்னிடம் கூறவில்லை. அந்த அமைப்புகள் உங்கள் நாட்டில் இல்லை என நீங்களும் கூறவில்லை. அவர்களின் தேவையை விரும்பவில்லை என நீங்கள் சொல்லியும் நான் கேட்டதில்லை இம்ரான் சார்.

நான் கேள்விப்பட்ட வரையிலும், ஜெயிஷ் முகமது, லக்‌ஷர் இ தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகள் அனைத்தும் உங்களின் பந்துகள் போன்றவை. அந்த பந்துகளை நீங்கள் பாகிஸ்தான் என்ற பவுண்ட்ரியை கடந்து இந்தியா என்ற பெவிலியனுக்கு தொடர்ந்து அடிக்கிறீர்கள். பாம்களை கிரிக்கெட் பந்துகள் போன்று நீங்கள் கருதுகிறீர்களா. இதையும் எங்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுங்கள்’ என கடுமையாக விமர்சித்துள்ளார்.

You'r reading டியர் பிரைம் மினிஸ்டர்... இதை எங்களுக்கு கற்றுக்கொடுங்கள் - இம்ரான் கானை விளாசிய ராம் கோபால் வர்மா! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை