இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்து பாகிஸ் தான் செல்லும் ஆற்று நீரை அணை கட்டி இந்தியாவுக்குள்ளேயே திருப்பி விட முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பில்வாமா தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது பொருளாதார ரீதியினான தாக்குதலைத் தொடர மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு கட்டமாக இந்தியாவின் கிழக்குப் பகுதியில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் ராவி,பியாஸ்,சட் லஜ் நதிகளை திசை திருப்பப் போவதாக நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
மூன்று நதிகளின் குறுக்கே அணை களைக் கட்டி ஒரு சொட்டு தண்ணீர் கூட பாகிஸ்தானுக்குள் செல்லாமல் யமுனை நதியில் கொண்டு சேர்ப்போம். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் கூடுதல் தண்ணீர் பாயும் என்று கட்கரி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் நதிநீர் பங்கீட்டில் பிரச்னை எழுந்து இரு நாடுகளிடையே 1960-ல் நதி நீர்ப்பங்கீடு ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை மீற இந்தியா தயாராகி விட்டதால் சர்ச்சை வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
கும்பமேளா கூத்து.....நிர்வாண அகோரிகளுக்கு ஹைடெக் குடில்......வாட்டர் ஹீட்டர் வசதியும் உண்டு!