கும்பமேளா கூத்து.....நிர்வாண அகோரிகளுக்கு ஹைடெக் குடில்......வாட்டர் ஹீட்டர் வசதியும் உண்டு!

300 hi-tech huts equipped with modern gadgets for Hindu saints #KumbhMela2019

by Nagaraj, Jan 21, 2019, 15:30 PM IST

கும்பமேளாவில் நிர்வாண அகோரிகள், சாமியார்கள், மடாதிபதிகளுக்கு என சகல வசதிகளுடன் ஹைடெக் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. உ.பி.யின் அலகாபாத்தில் கும்பமேளா நடைபெற்று வருகிறது.

கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 54 நாட்களுக்கு நடைபெறும் கும்பமேளாவில் தினமும் லட்சக்கணக்கானோர் புனித நீராடி வருகின்றனர். மடாதிபதிகள், நிர்வாண சாமியார்கள், அகோரிகளும் பெருமளவில் குவிந்துள்ளனர்.

இவர்களுக்காகவே ஆற்றின் நடுவே தனித் தீவு ஒன்றை உருவாக்கியுள்ளது உ.பி.அரசு. நர்மதா குடில், சபர்மதி குடில், சரஸ்வதி குடில் என பெயரிட்டு 3 விதமாக 300 குடில்கள் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

குடில்களில் குளிருக்கு இதமாக ஹூட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. குடில்களுக்கு நடுவே திறந்த வெளி உணவு விடுதியும் அமைந்துள்ளது. இந்தக் குடில்களுக்கு சென்று வர நவீன மோட்டார்களும் நிறுத்தப்பட்டு சாமியார்களுக்கு சொர்க்கபுரியாக திகழ்கிறது கும்பமேளா.

You'r reading கும்பமேளா கூத்து.....நிர்வாண அகோரிகளுக்கு ஹைடெக் குடில்......வாட்டர் ஹீட்டர் வசதியும் உண்டு! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை