பாகிஸ்தான் தம்பதியர் பதிவேற்றிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நெட்டிசங்களின் ‘ஹாட் டாப்பிக்’ விவாதமாகவும் இந்த புகைப்படம் உள்ளது.
நாகரிக மாற்றத்திற்கு ஏற்றார்போல் விஞ்ஞானம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதே நேரத்தில், ஆண், பெண் இருவரும் சமமானவர்கள், பாலினத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை என்ற கோட்பாடு இன்றைய இளைய தலைமுறையினரிடம் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும், ஆண் ஆதிக்கம், பெண்களை அடிமையாக நடத்துவது போன்றவை சில உலக நாடுகளில் நிகழ்ந்து வருகிறது.
இப்படியான சூழலில், பாகிஸ்தான் தம்பதியர் பதிவேற்றிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பாலியல் துஷ்பிரயோகங்களை உடைத்தெறியும் நோக்கில் வேடிக்கையாக அவர்கள் ஒரு புகைப்படத்தை எடுத்திருக்கின்றனர். இரவு விருந்திற்காக உணவகத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது, இருவரும் செஃபி எடுத்துள்ளனர். ‘ஆண் பெண்’ இருவருக்கும் ஒரே மாதிரியான சமநிலை வேண்டும் என்பதுபோல், இஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்காவை அப்பெண்ணின் கணவர் அணிந்து இருப்பதுபோல் புகைப்படம் எடுத்துள்ளனர். விளையாட்டாக அவர்கள் எடுத்த புகைப்படம், தற்போது இணையதள வாசிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமூக ஆர்வலர்கள், நெட்டிசங்கள் என அனைவரும் தங்கள் கருத்தைப் பதிவிட்டு, பாகிஸ்தான் தம்பதியரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதே சமயம், தம்பதியர்க்கு எதிராகக் கண்டகங்களும் எழுந்த வண்ணம் உள்ளது.