எச்1பி விசா பெற 15 நிறுவனங்கள் மீது அதிரடி தடை..

Advertisement

அமெரிக்கா: இந்தியா உள்பட வெளிநாடுகளை சேர்ந்த ஊழியர்கள் பணிபுரியும் 15 நிறுவனங்களுக்கு எச்1பி விசா வழங்க தடை விதித்து அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றதை அடுத்து, எச்1பி விசா மீது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கூறினார். அதன்படி, எச்1பி விசா மீது அடுத்து அடுத்து பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து இந்தியா உள்பட வெளிநாட்டவர்களுக்கு இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அடுத்ததாக எச்1பி விசா பெறுவதில் சுமார் 15 நிறுவனங்கள் மீது தடை விதித்து அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம், சம்பளம் மற்றும் வேலை நேரத்தை மீறிய காரணத்தால் இந்த நிறுவனங்கள் மீது நாணயமற்ற நிறுவனங்கள் என்ற குற்றச்சாட்டை சுமத்தி சுமார் 15 நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளது.

மேலும். தடை விதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் மீது விசாரணை துவங்கப்படும் என்றும், குற்றங்கள் உறுதி செய்யும் பட்சத்தில் தடை சுமார் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்ற அளவின் அடிப்படையில் தடை காலங்கள் வேறுப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள 15 நிறுவனங்களின் விபரம்:

இந்த தடை விவரம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Advertisement
/body>