பேட்மேன் கலாச்சார சீரழிவு: பாகிஸ்தானில் தடை

by Rahini A, Feb 13, 2018, 09:30 AM IST

கலாச்சார சீரழிவு என 'பேட்மேன்' திரைப்படத்துக்கு பாகிஸ்தான் சென்சார் வாரியம் பாகிஸ்தானில் படன் திரையிடப்படத் தடை விதித்துள்ளது.

நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் பாலிவுட் திரைப்படமாக வெளிவந்திருக்கும் படம் 'பேட்மேன்'. மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின் மற்றும் அதனது சுகாதாரப் பயன்பாடு குறித்து ஒரு தமிழரின் பெருமையை எடுத்துக்கூறும் திரைப்படமாக 'பேட்மேன்' உள்ளது. இப்படம் இந்தியாவில் பல தரப்பினரின் ஆதரவையும் பெற்று வெளியாகி திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தைக் கலாச்சார சீரழிவு என பாகிஸான் சினிமா சென்சார் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தானின் கலாச்சார பழமைக்கு எதிராக இருப்பதால் இத்திரைப்படத்தைத் திரையிட பாகிஸ்தானில் அனுமதி இல்லை என பாகிஸ்தான் சென்சார் வாரியம் அறிவித்துள்ளது.

You'r reading பேட்மேன் கலாச்சார சீரழிவு: பாகிஸ்தானில் தடை Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை