மோடியை விமர்சித்து பேசிய பாக். அமைச்சருக்கு ஷாக்

Advertisement

பிரதமர் மோடியை விமர்சித்து பேசிக் கொண்டிருந்த பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமத் கையில் திடீரென எலக்ட்ரிக் ஷாக் அடித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஆகஸ்ட் 5ம் தேதியன்று மத்திய அரசு முடிவெடுத்தது. மேலும் காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதைத் தொடர்ந்து, அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, இந்திய அரசின் நடவடிக்கையால் காஷ்மீரில் ஊடுருவ முடியாமல் போகுமே என்ற கவலையில் பாகிஸ்தான், இந்த பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக மாற்றத் துடிக்கிறது. காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்து சென்றது. அமெரிக்க அதிபர் டிரம்பிடம், பாக். பிரதமர் இம்ரான்கான் முறையிட்டுப் பார்த்தார். எதுவும் பலனளிக்கவில்லை. இது இந்தியாவுடன் பாகிஸ்தான் பேசி தீர்க்க வேண்டிய பிரச்னை என்று மற்ற நாடுகள் ஒதுங்கி விட்டன.

இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் காஷ்மீர் நேரம் என்ற தலைப்பில் ஒரு பேரணி, பொதுக் கூட்டம் நேற்று(ஆக.30) நடத்தப்பட்டது. இதில் அந்நாட்டு ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமத் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், மோடி அவர்களே, உங்கள் நோக்கம் எங்களுக்கு தெரியும் என்று தொடங்கி, மோடியை விமர்சித்து தொடங்கினார். அப்போது மைக் பிடித்திருந்த அவரது கையில் திடீரென எலக்ட்ரிக் ஷாக் அடிக்க துள்ளி குதித்தார். ஒரு வினாடியில் சுதாரித்து கொண்ட அவர், கரண்ட் ஷாக் அடிக்கிறது.

ஆனால், இதை எல்லாம் நாங்கள் பொருட்படுத்த மாட்டோம். மோடியால் இந்த எதிர்ப்பு பேரணிகளை ஒன்றும் செய்ய முடியாது என்று சிரித்து கொண்டே கூறினார்.
அமைச்சர் ஷேக் ரஷீத் அகமத், மோடியைப் பற்றி பேசத் தொடங்கியதுமே ஷாக் அடித்த வீடியோ காட்சி, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பி.ஜே.பி. கட்சிக்காரர்கள் உற்சாகமாக கமென்ட்ஸ் அள்ளிக் குவித்து வருகின்றனர்.

காஷ்மீர் உள்நாட்டு விவகாரம், பாகிஸ்தான் தலையிட முடியாது; ராகுல்காந்தி தெளிவு!

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>