வெள்ளை மாளிகையைக் கலக்கும் இந்தியர்!

Advertisement

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் மிக உயர்ந்தப் பதவியை எட்டிய முதல் அமெரிக்கவாழ் இந்தியராகக் கருதப்படுகிறார் ராஜ் ஷா.

அமெரிக்க அதிபர் மாளிகையில் தலைமை செய்தித்தொடர்பு செயலாளராகப் பதவி வகிப்பவர் அமெரிக்கவாழ் இந்தியரான ராஜ் ஷா. 33 வயதாகும் ராஜ் ஷா கடந்த செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பு செயலாளராகப் பதவி ஏற்றார்.

வெள்ளை மாளிகையின் மிக உயர்ந்தப் பதவிகளுள் ஒன்றான இப்பதவியை ஏற்ற ராஜ் ஷா, சமீபத்தில்தான் வெள்ளை மாளிகையின் செய்திவிளக்கக் கூட்டத்தில் முதன்முறையாக உரையாற்றினார். இந்தப் பெருமையை முதன்முதலாகப் பெறுபவரும் ராஜ் ஷாதான்.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தொடர்பான செய்திகளையும் விளக்கங்களையும் முதன்முதலாக உலகுக்குத் தெரியப்படுத்தும் முக்கியப் பொறுப்பில் உயர் பதவி ஏற்றிருக்கும் ராஜ் ஷாவுக்கு அமெரிக்காவின் தலைமை அதிகாரிகள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்

Advertisement
/body>