அமெரிக்காவில் நள்ளிரவில் பயங்கரம்.. பலர் மீது துப்பாக்கிச் சூடு..

Multiple people shot on streets of Washington, DC: local media

by எஸ். எம். கணபதி, Sep 20, 2019, 10:30 AM IST

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சிறிது நேரத்திற்கு முன்பு பலர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் எத்தனை பேர் சாவு, எவ்வளவு பேருக்கு காயம் என்பது தெரியவில்லை. 4 ஆம்புலன்ஸ் மற்றும் ஏராளமான போலீஸ் வாகனங்கள் சுற்றி வருவதை ஒருவர் ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

அமெரிக்காவில் பள்ளி, சர்ச், ஷாப்பிங் மால் என்று மக்கள் கூடும் இடங்களில் திடீரென எவனாவது சரமாரியாக துப்பாக்கியால் சுடும் சம்பவங்கள் நடப்பதுண்டு. இதனால், அங்கு துப்பாக்கி லைசென்ஸ் கொடுப்பதை நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளும் அடிக்கடி எழுப்பப்படும்.

வாஷிங்டன் நகரில் சற்று நேரத்திற்கு முன்பு அதாவது அங்கு இரவு 19ம் தேதி இரவு 11 மணிக்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. வாஷிங்டன் நகரில் 14வது தெருவும், கொலம்பியா சாலையும் சந்திக்கும் இடத்தில்தான் சம்பவம் நடந்துள்ளது. யார் சுட்டது, எத்தனை பேர் சாவு, எத்தனை பேர் காயம் என்ற விவரம் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அந்த பகுதியில் 4 ஆம்புலன்ஸ் மற்றும் பல போலீஸ் வாகனங்கள் வந்து கொண்டிருப்பதை ஜாய் கோர்ப் என்பவர் வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து முழுவிவரங்கள் இனிமேல்தான் ஊடகங்கள் மூலம் தெரிய வரும்.

You'r reading அமெரிக்காவில் நள்ளிரவில் பயங்கரம்.. பலர் மீது துப்பாக்கிச் சூடு.. Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை