இலங்கை தமிழர் தம்பதிக்கு அடைக்கலம் தர ஆஸ்திரேலியா மறுப்பு.. ஐ.நா.கோரிக்கையும் நிராகரிப்பு

Australia rejects UN call to release Tamil family held at Christmas Island

by எஸ். எம். கணபதி, Oct 5, 2019, 08:45 AM IST

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் வந்து குடியேறிய தமிழ் குடும்பத்தினருக்கு அடைக்கலம் தருவதற்கு ஐ.நா.வலியுறுத்தியும் அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த போது, இலங்கையில் இருந்து தமிழர் குடும்பங்கள், சட்டவிரோதமாக படகுகளில் ஆஸ்ரேலியாவுக்கு சென்றனர். அங்கு சட்டவிரோதமாக நுழைபவர்கள் கைது செய்யப்பட்டு, வெளியேற்றப்படுகிறார்கள். இந்நிலையில், கோகிலபத்மபிரியா, நடேசலிங்கம் ஆகிய தம்பதிகள் கடந்த 2012, 2013ம் ஆண்டுகளில் தனித்தனியாக ஆஸ்திரேலியாவுக்கு படகுகளில் வந்து சேர்ந்தனர். அங்கு தங்கள் உறவினர்கள் வசிக்கும் குயின்ஸ்லேண்ட் பகுதியில், குடியேறினர்.

இந்த தம்பதிக்கு தற்போது கோபிகா, தருணிகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், இவர்கள் சட்டவிரோதமாக குடியேறியதை கடந்த 2017ல் கண்டுபிடித்த குடிபெயர்வு அதிகாரிகள் இவர்களை சிறைபிடித்தனர். இதையடுத்து, கடந்த 19 மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். தங்களை அகதிகளாக அங்கீகரிக்கவும், குழந்தைகளுக்கு குடியுரிமை கேட்டும் இவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இவர்களின் வழக்கறிஞர் கரீனா போர்டு, இவர்களை அகதிகளாக அங்கீகரித்து சமூகத்தில் இணைந்து வாழ அனுமதிக்க வேண்டும் அல்லது கைதி வாழ்க்கைக்கு ஏதோ ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கோரி, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு மனு அனுப்பினார். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலும், இவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் அகதிகள் அந்தஸ்து அளித்து குடியே அனுமதிக்குமாறு ஆஸ்திரேலிய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், ஆஸ்திரேலிய அரசு அதை நிராகரித்து விட்டது.

தற்போது இவர்களுக்காக ஆஸ்திரேலியத் தமிழர்கள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு போராடி வருகின்றனர். அவர்களுக்கு உள்ளூரைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

You'r reading இலங்கை தமிழர் தம்பதிக்கு அடைக்கலம் தர ஆஸ்திரேலியா மறுப்பு.. ஐ.நா.கோரிக்கையும் நிராகரிப்பு Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை