தீபாவளியில் விஜய், விஜய்சேதுபதி, கார்த்தி போட்டி... விஜய் 64 குழு நேருக்கு நேர் மோதல்...

by Chandru, Oct 5, 2019, 09:17 AM IST

விஜய் நடிக்க அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப் படத்தில் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கைதி. இதில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறார்கள். விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் சங்கத் தமிழன் திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.. இதனால் விஜய்.

கார்த்தி, விஜய்சேதுபதி ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்படுள்ளது.
இதில் சுவாரஸ்யாமான விஷயம் என்வென்றால் விஜய் அடுத்ததாக நடிக்கும் தளபதி 64 படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். ஒரே படத்தில் இணையும் விஜய்.

விஜய்சேதுபதி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தீபாவளியில் போடியாளர்களாக களம் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


More Cinema News