அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னை குத்துச் சண்டை வீரர் போல் போட்டோஷாப் செய்த படத்தை வெளியிட்டிருக்கிறார். இதற்கு ஏராளமான கிண்டல் பதில்கள் வந்துள்ளன.
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையிலேயே அதிபரை கவனிக்க டாக்டர்கள் இருப்பார்கள். தேவை ஏற்பட்டால்தான் அதிபர் மருத்துவமனைக்கு செல்வார். கடந்த சனிக்கிழமை(நவ.23) அதிபர் டொனால்டு டிரம்ப், வாஷிங்டனுக்கு வெளியே ஒரு அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அவர் வழக்கமான செக்-அப்புக்குத்தான் போயிருக்கிறார் என்று வெள்ளை மாளிகை கூறியது.
எனினும், அதிபருக்கு உடலில் ஏதோ கோளாறு என்று வதந்்திகள் பரவின. இதைத் தொடர்ந்து, டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோ வெளியிட்டிருந்தார். அதில், தனது படத்தை போட்டோஷாப் செய்து, தன்னை ஒரு பலமான குத்துச் சண்டை வீரர் போல் காட்டிக் கொண்டிருக்கிறார். 23ம் புலிகேசி படத்தில் வடிவேலு கட்அவுட் வைத்திருப்பார்களே, அதே போன்ற படம்தான்.
அதாவது, எனக்கு உடம்புக்கு ஒண்ணும் ஆகலே. நான் ரொம்ப நல்லா இருக்கிறேன் என்று ஒரு படத்தைப் போட்டு மெசேஜ் சொல்லியிருக்கிறாராம் டிரம்ப். இந்த ட்விட்டைப் பார்த்து விட்டு அமெரிக்கர்கள் பலவிதமாக கிண்டல் செய்து பதில் கொடுத்து வருகிறார்கள்.