ஈராக் மீது மீண்டும் தாக்குதல்.. 2 ராக்கெட்களில் குண்டு வீச்சு..

by எஸ். எம். கணபதி, Jan 9, 2020, 11:49 AM IST

ஈராக் மீது மீண்டும் 2 ராக்கெட்கள் ஏவி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்குவதற்காக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.


இதில், அல் அசாத் மற்றும் இர்பில் நகரங்களில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் பலத்த சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உரையாற்றுகையில், உலகிலேயே சக்திவாய்ந்த ராணுவத்தையும், நவீன ஆயுதங்களையும் அமெரிக்கா வைத்திருக்கிறது. ஆனாலும், அவற்றை பயன்படுத்த மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.


இதற்கிடையே, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்றிரவு 2 ராக்கெட்டுகள் ஏவி, மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பாக்தாத்தில் வெளிநாட்டு தூதரகங்கள், முக்கிய அலுவலகங்கள் உள்ளன. அமெரிக்க தூதகரமும் இங்கு உள்ளது. இந்நிலையில், மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தாக்குதலில் உயிரிழப்பு மற்றும் சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் இ்ல்லை.More World News