பேஸ்புக் தளத்தில் முதலிடம் யாருக்கு? டிரம்ப் போட்ட ட்விட்

by எஸ். எம். கணபதி, Feb 15, 2020, 11:35 AM IST

பேஸ்புக் தளத்தில் முதலிடத்தில் உள்ள நான், 2வது இடத்தில் உள்ள இந்திய பிரதமர் மோடியை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 24ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். 2 நாள் அரசு முறைப் பயணமாக வரும் அதிபர் டிரம்ப், டெல்லி மற்றும் அகமதாபாத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவரை வரவேற்று ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி, ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், அமெரிக்க அதிபரின் இந்த பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும், இருநாடுகளுக்கு மட்டுமின்றி உலக மக்களுக்கு இந்த சந்திப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், சிறந்த மரியாதை என நினைக்கிறேன். பேஸ்புக் தளத்தில் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டு முதலிடத்தில் டொனால்டு டிரம்ப் உள்ளதாகவும், 2வது இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளதாகவும் மார்க் ஜுகர்பெர்க் சமீபத்தில் கூறியிருந்தார். இன்னும் 2 வாரத்தில் நான் இந்தியாவுக்கு செல்கிறேன். இந்திய பயணத்தையும், பிரதமர் மோடியை சந்திப்பதையும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளேன் என்று கூறியிருக்கிறார்.


Leave a reply