கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து அரசி எலிசபெத் மற்றும் அவரது கணவர் பிலிப், பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெளியேறுகின்றனர்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் நோய் இப்போது 135 நாடுகளுக்குப் பரவி விட்டது. இது வரை இந்நோயால் 5,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் இது வரை கொரோனா தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 1140 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், பக்கிங்காம் அரண்மனையில் கொரோனா வைரஸ் பரவலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாக, அந்நாட்டு அரசி 93 வயது எலிசபெத், அவரது 98 வயது கணவர் பிலிப் ஆகியோர் இந்த வாரம் அரண்மனையை விட்டு வெளியேறுகின்றனர். அவர்கள், வின்ஸ்டர் கேஸ்டில் பகுதியில் உள்ள ராயல் சான்ட்ரிங்காம் எஸ்டேட்டில் குடியேறுகின்றனர் என்று அரண்மனை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.