கொரோனா நோயால் 24 ஆயிரம் பேர் பலி..

by எஸ். எம். கணபதி, Mar 27, 2020, 09:59 AM IST

5.32 லட்சம் பேர் பாதிப்பு..


உலகம் முழுவதும் 5 லட்சத்து 32,224 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இது வரை 24,087 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய ஆட்கொல்லி நோய் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியுள்ளது. இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த நோய் அதிகமாக பரவியுள்ளது.இன்று(மார்ச்27) காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 5 லட்சத்து 32,224 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது வரை 24,087 பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்றரை லட்சம் பேர் இந்நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர். தற்போது 19,357 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்தியாவில் நேற்று வரை 656 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மகாராஷ்டிரா, கேரளா மற்றும் டெல்லியில் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.


Leave a reply