உலகம் முழுவதும் 24 லட்சத்து 14,612 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதில், ஒரு லட்சத்து 65,174 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அமெரிக்காவில்தான் இந்நோய் கோராத் தாண்டவம் ஆடி வருகிறது. நேற்று ஒரே நாளில் 24 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இது வரை இந்நாட்டில் 7 லட்சத்து 65,174 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில், 40,565 பேர் உயிரிழந்துள்ளனர். 6 லட்சத்து 29, 441 பேர் குணமடைந்துள்ளனர்.
ஸ்பெயினில் ஒரு லட்சத்து 98,674 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், 20,453 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் ஒரு லட்சத்து 78,972 பேருக்கு கொரோனா பரவியுள்ள நிலையில், 23,660 பேர் பலியாகியுள்ளனர். பிரான்சில் ஒரு லட்சத்து 52,894 பேருக்கு கொரேனா தொற்று உறுதியான நிலையில், 19,718 பேர் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்தில் ஒரு லட்சத்து 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான சூழலில், 16,060 பேர் இந்நோயால் பலியாகியுள்ளனர். சீனாவில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தி விட்டனர். நேற்று புதிதாக 12 பேருக்குத்தான் கொரோனா பாதிப்பு தெரிய வந்தது. இவர்களுடன் மொத்தமாக 82,211 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 4632 பேர் பலியாகியுள்ளனர்.