3 நாட்களுக்கு முடங்கிய சமூகவலைதளங்கள் - பொதுமக்கள் அவதி!

Mar 8, 2018, 10:12 AM IST

கொழும்பு: இலங்கையில் இரு பிரிவினருக்கு இடையே எற்பட்டு வரும் பயங்கர மோதல் எதிரொலியால் சமூக வலைத்தளங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இரு பிரிவினருக்கு இடையே கடந்த சில நாட்களாக பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு இடங்களில் தீ வைப்பு, அடிதடி உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்தன. இதனால், இலங்கையில் 10 நாட்களுக்கு இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மேலும், கலவரத்தை கட்டுப்படுத்த தடியடி, கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றை ராணுவம் மற்றும் போலீசார் பயன்படுத்தினர். இதைதவிர, சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வதந்திகள் பரவுவதால் வன்முறை மேலும் தீவிரமடையும் சூழல் ஏற்படுகிறது.

இதனால், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதைதவிர, மொபைல் சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

You'r reading 3 நாட்களுக்கு முடங்கிய சமூகவலைதளங்கள் - பொதுமக்கள் அவதி! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை