உலகின் மிக சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக பார்க்ப்படுபவர் ஜெர்மனி நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல். அவர் மகளிர் தினதத்ன்று கொடுத்த செய்தி உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
மெர்க்கல் பெண்கள் தினம் குறித்துப் பேசுகையில், `நமக்கு முன்னர் பல பெண்கள் தீர்க்கமாக போராடியும் தியாகங்கள் பல செய்தும் பெண்களுக்காகன உரிமையைப் பெற்றுத் தந்துள்ளனர். ஆனால், நமக்கான உரிமையைப் பெறும் பாதையில் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. அதை வைத்துப் பார்த்தால், இது வெறும் தியாகங்களை நினைவுகூறும் தினமாக இருக்கக் கூடாது. மாறாக நம் உரிமையைப் பெறுவதற்கான போராட்டத்தை இன்னும் தீர்க்கமாக எடுத்த செல்ல உறுதி கூறுவோம்’ என்றார் உறுதிபட.
முன்னேறிய நாட்டின் அதிபராக இருக்கும் ஒரு பெண், `மகளிருக்கான உரிமையைப் பெறும் பயணம் இன்னும் முடிவு பெறவில்லை’ என்று கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.