அமெரிக்காவில், போதை மருந்து விற்பனை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்காவில் நியூஹாம்ஷிர் மாகாணத்தில் உள்ள மன்செஸ்டர் பகுதியில் விழா ஒன்று நடைபெற்றது. இதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அமெரிக்காவில், போதை மருந்துக்கு அடிமையாகி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் சம்பவம் வேதனையை அளிக்கிறது. போதை மருந்துகளால் பலரது வாழ்க்கை சீரழிந்து வருகிறது.
பேதை மருந்துக்கு அடிமையாகி மரணம் அடைவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அதற்கான சட்டதிருத்த நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும். அத்தகைய நடவடிக்கையில் நீதிதுறை தீவிரமாக உள்ளது. போதை பொருள் விற்பனை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.