பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் சமீபகாலமாக வெளிப்படையாகவே அதிகரித்துக் காணப்படுகிறது.
பெரும் இயற்கைச் சீற்றங்களான வெள்ளம், புயல், நிலச்சரிவு எனப் பல அபாயங்களையும் கண்கூடாகவே பார்த்தும் அனுபவித்தும் வருகிறோம். காலப்போக்கில் இதனால் நமது இயற்கை சூழலே பாதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே இதன் விளைவுகள் உலகெங்கிலும் தண்ணீர் பஞ்சம், பல்லுயிர் சிதைவு, விளைச்சலில் வீழ்ச்சி, பல்கிப்பெருகும் நோய்கள் என எதிரொலித்து வருகிறது.
பருவநிலை மாற்றத்தால் காடு, நிலைம், நீர் என இயற்கையை மட்டுமே நம்பி வாழும் மக்கள் இனத்தை வெகுவாகவே பாதிக்கிறது. 2050-ம் ஆண்டின் போது பருவநிலை மாற்றத்தால் அகதிகளாக வீழும் மக்களின் எண்ணிக்கை 150 மில்லியனாகவும அதில் 80 சதவிகிதத்தினர் பெண்கள் மற்றும் குழந்தைகளாக இருப்பர் எனக் கூறப்படுகிறது.
1.4 பில்லியன் மக்கள் தொகை நிறைந்த இந்த உலகில் வருமைகோட்டுக்குக் கீழே பருவநிலை மாற்றங்களால் பேரழிவுகளையும் சீற்றங்களையும் சந்திக்கும் நாடுகளில் அளவுக்கு அதிகமாகக் கஷ்டப்படும் பெரும்பான்மையினராகப் பெண்களும் குழந்தைகளுமே உள்ளனர்.
சர்வதேச அளவில் இயற்கைச் சீற்றங்களால் ஆண்களைவிட ஐந்து மடங்கு அதிகமாகவே பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.