திருமணம் செய்துகொள்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி டேபிள் டென்னிஸ் வீரர் சௌமியாஜித் கோஷ் மீது இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இந்திய தேசத்திற்காக 2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றவர் சௌமியாஜித் கோஷ். இவருக்கு அர்ஜூனா விருதும் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மீது 19 வயது மதிக்கத்தக்க எபேலா என்ற பெண் ஒருவர் கொல்கத்தாவில் உள்ள பர்ஷாத் மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில், ”எனக்கும் சௌமியாஜித்துக்கும் சமூக வலைத்தளங்கள் மூலம் 2014ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு, நானும் சௌமியாஜித்தும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். 3 வருடங்களில் அவர் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.
நான் கர்ப்பமாகி கருக்கலைப்பும் செய்து உள்ளேன். தற்போது திருமணம் குறித்து சௌமியாஜித்திடம் கேட்டபோது, தொடர்ந்து மறுத்து வருகிறார்” என புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் கவுன்சில் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளது. இதனால், காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்பது குறித்து சந்தேகம் ஏற்படுள்ளது.