மாலத்தீவு நாட்டில் கடந்த 45 நாள்களாக அமலில் இருந்த அவசரநிலை தளர்த்தப்பட்டது.
இது குறித்து அந்நாட்டின் அதிபர் அப்துல்லா யமீன், `நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சிலர் அரசியல்வாதிகள் சிலருடன் சட்டத்துக்கு புறம்பாக கை கோத்து சட்டப்படி தேர்ந்தெடுத்து பதவியில் இருக்கும் அரசை கவிழ்க்கப் பார்த்தனர். இ
து நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தது. எனவே, கடந்த 45 நாள்களாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தது. இப்போது, இந்தப் பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கின்றனர். எனவே, அவசரநிலை தளரத்தப்படுகிறுது’ என்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 5-ம் தேதி மாலத்தீவுகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
முதலில் 15 நாள்கள் மட்டுமே அவசரநிலை இருக்கும் என்று உத்தரவு பிறப்பத்திருந்த நிலையில், நிலைமை கட்டுக்குள் வராததால் அவசரநிலை 45 நாள்களாக அதிகரிக்கப்பட்டது. மாலத்தீவுகளில் அவசரநிலை தளர்த்தப்பட்டு இருப்பதை இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் வரவேற்றிருக்கின்றன.