பாங்காக்கில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரம்: ஒரு மாத காலம் நெருக்கடி நிலை அமல் .

Intensification of anti-government protests in Bangkok: A month-long state of emergency

by Balaji, Oct 16, 2020, 19:45 PM IST

தாய்லாந்து தலைநகரம் பாங்காக்கில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அங்கு ஒரு மாத காலம் நெருக்கடி நிலை அமல் படுத்தப்படும் என்று அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா அறிவித்துள்ளார். தாய்லாந்து நாட்டில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். மன்னருக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொரோனா அச்சுறுத்தலையும் மீறி தலைநகர் பாங்காங்கில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் முக்கிய தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்ட போதிலும் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என பலர் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

தாய்லாந்து 2020 மக்கள் கட்சி என்ற அமைப்பு மக்கள் அனைவரும் தலைநகரில் அரசு அலுவலகத்தின் முன்பு திறந்து வருமாறு வேண்டுகோள் விடுத்தது. பிரயுத் சான்-ஓ-சா பிரதமர் பதவி விலகும் வரை அரசு அலுவலகத்தின் முன்பு உள்ள சந்திப்பில் இருந்து செல்ல மாட்டோம் என அறிவித்து கடந்த புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 10 மணி நேரம் நகரத் தெருக்களில் ஊர்வலமாக வந்த அவகள் அரசு அலுவலகங்களின் முன்பு புதன்கிழமை இரவு அங்கேயே தங்கினார்கள். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 5 பேருக்கு மேல் கூடக் கூடாது என்று தாய்லாந்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும் அதையும் மீறி மக்கள் ஒரே இடத்தில் கூடினர். அப்போது தாய்லாந்து அரசி கோவிலுக்கு செல்ல அநாத வழியே வந்தார். அப்போது மக்கள் கோஷம் எழுப்பி மறியலில் ஈடுபட முயன்றதால் ராணுவம் வந்து மக்களை கலைத்து அரசி செல்ல உதவியது. இதன் காரணமாக இன்று அதிகாலை நெருக்கடி நிலையினை பிரதமர் அறிவித்தார். இன்று காலை பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தலைமையில் நடந்தாக அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் தலைநகர் பாங்காக்கில் பிரதமர் அறிவித்த நெருக்கடி நிலை தீர்மானத்துக்கு அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்தது.

தாய்லாந்தில் ராணுவச் சட்டம் பிரகடனப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சூழ்நிலை மிகவும் மோசமானால் ஊரடங்கு அமல் செய்யப்படலாம் என்று பிரதமர் பிரயுத் சான்-ஓ சா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பொது அமைதியை பாதுகாக்க பொருத்தமான நடவடிக்கை என்று அரசு அதிகாரிகள் கருதுவதை அவர்கள் நிறைவேற்ற அவசர நிலை உத்தரவு அதிகாரம் வழங்குகிறது.நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் ஒன்று கூடி பேரணி நடத்தக்கூடாது கலைந்து செல்ல வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இந்த அறிவிப்புகளை மீறுவோர் ஐந்தாண்டு காலம் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்தனர்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More World News

அதிகம் படித்தவை