முரளிதரனை நீக்கவில்லை என்றால்.. சன் ரைசர்ஸ் அணிக்கு நாம் தமிழர் எச்சரிக்கை!

by Sasitharan, Oct 16, 2020, 19:18 PM IST

800 பட சர்ச்சை நீண்டுகொண்டே இருக்கிறது. படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி நடிக்க கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதுதொடர்பாக, ``தமிழ் குலத்திற்கே துரோகியானவர். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை சிங்களர்களுடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தவர். இலங்கையில் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை ஒட்டுமொத்த உலகமும் கண்டித்த போது, தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என்று ஏகடியம் பேசியவர்" என்று முத்தையா முரளிதரன் மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் முரளிதரன். இருந்தும் தற்போது எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

இதற்கிடையே, ``சன் ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் முத்தையா முரளிதரன் நீக்கப்பட வேண்டும். தமிழின துரோகியை பயிற்சியாளராக வைத்திருக்கும் கலாநிதிமாறனை வன்மையாக கண்டிக்கிறோம். முரளிதரனை நீக்கவில்லை என்றால் சன் குழுமத்தை மானத்தமிழர்கள் புறக்கணிப்போம்." என்று நாம் தமிழர் கட்சி திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளது. அக்கட்சியின் துரைமுருகன் பாண்டியன் கூறியுள்ளார். மேலும் அவர், ``இனப்படுகொலையாளன் ராசபக்சே நெல்சன்மண்டேலா என சொன்ன போதும், லட்சக்கணக்கான தமிழ் மக்கள் மரணித்த 2009 ஆண்டை உங்கள் வாழ்வில் சிறந்த ஆண்டு என சொன்ன போதும், எங்களுக்கு வேதனையாகத்தான் இருந்தது முரளிதரன். யோக்கியன் வேடம் போடுபவர்களை நிறைய பார்த்து விட்டோம்" என்று முரளிதரன் அறிக்கைக்கு பதில் கொடுத்துள்ளார்.

Get your business listed on our directory >>More Sports News

அதிகம் படித்தவை