இந்திய சீன எல்லைப் பிரச்சனையில் அமெரிக்க தலையிட முடியாது : சீனா பதிலடி.

இந்திய - சீன எல்லைப் பிரச்சனை, கிழக்கு லடாக் பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரர்களின் கைகலப்பு ஆகியவை, இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளின் தனிப்பட்ட பிரச்சனை . இதில் அமெரிக்க தலையிட வேண்டிய அவசியமில்லை என்று சீனா தெரிவித்துள்ளது.

by Balaji, Oct 28, 2020, 18:29 PM IST

இந்திய - சீன எல்லை பிரச்னைகளால் ஏற்படும் அபாயங்களை இந்தியா சமாளிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா உதவி செய்யும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ புதுதில்லியில் நேற்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக சீன வெளியுறவு அமைச்சகம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை பேச்சாளர் வாங் வென்பின் கூறியதாவது: இந்திய - சீன எல்லை விவகாரம் தற்போது ஒரு ஸ்திரமான நிலையில் உள்ளது. இருநாடுகளும் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கான முடிவு செய்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அமெரிக்கா தன்னுடைய பசிபிக் கொள்கையை கொண்டு வந்து இந்திய - சீன எல்லைப் பிரச்சனையில் மூக்கை நுழைப்பது கண்டனத்துக்குரியது. எப்போதோ காலாவதியாகி விட்ட பனிப்போர் மனநிலை இன்னும் அமெரிக்காவிடமிருந்து மறையவில்லை. சர்வதேச விவகாரங்களில் மோதலை தூண்டும் வகையில் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருகிறது. எல்லை அரசியல் மோதலை மேற்கொள்ள நாடுகளை தூண்டி வருகிறது. இது உலக அரங்கில் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்க மேற்கொள்ளும் முயற்சியாகவே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவின் பேச்சு அமைந்துள்ளது. இந்திய - சீன பகுதியில் இரு நாட்டு நலனுக்கு எதிரான வகையில் அமெரிக்காவின் பேச்சு அமைந்துள்ளது. இத்தகைய அரசியல் விளையாட்டை இத்துடன் அமெரிக்கா நிறுத்தி கொள்ள வேண்டும் என்று சீனா வலியுறுத்துகிறது.

பிராந்திய வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவாக இருப்பினும் அதில் சம்பந்தப்பட்ட நாடுகளின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அவசியம் இடம்பெற வேண்டும். அதற்கான முயற்சிகள் இன்றைய தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் வகையில் அமைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You'r reading இந்திய சீன எல்லைப் பிரச்சனையில் அமெரிக்க தலையிட முடியாது : சீனா பதிலடி. Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை