மத்திய சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்காரி. இவர் இன்று தமிழகம் வரவிருக்கிறார். சென்னை வரும் அவரைத் தேடிச் சென்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பு தற்போது தொடங்கியுள்ளது. அரசின் அறிவிப்பில் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற இருப்பதால் அதில் பங்கேற்க முதல்வர் சென்றுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கின்ற நிலையில், இந்த சந்திப்பு நடைபெறுவது பேசுபொருளாகி உள்ளது. ஏற்கனவே அவ்வப்போது தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் அடிக்கடி டெல்லிச் சென்று வருகின்றனர். இதேபோல் சசிகலா விடுதலை தொடர்பாக டிடிவி தினகரன் ஒருபுறம் டெல்லி விசிட் அடித்து வருகிறார். இப்படியான நிலையில் நிதின் கட்காரி எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.