இந்த வாரம் பேஸ்புக்கிற்கு சோதனையான காலமாம் : மார்க் கருத்து

எதிர்வரும் வாரம் பேஸ்புக்கிற்குச் சோதனையான காலகட்டமாக இருக்கும் என அதன் நிறுவனர் தலைவர் மார்க் ஸுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

by Balaji, Nov 2, 2020, 10:03 AM IST

அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நவம்பர் 3ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் , தேர்தல் நாளுக்கும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில் மிகவும் பரபரப்பான சம்பவங்கள் நடக்கும். வன்முறைகள் கூட வெடிக்க வாய்ப்புள்ளது என மார்க் ஸுக்கர்பர்க் எச்சரித்துள்ளார்.அமெரிக்கா தற்போது பிளவுபட்டு நிற்பதால் உள்நாட்டில் அமைதியின்மை ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக புதிய அச்சுறுத்தல்களைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்., எனவே இந்த காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் இடம் பெறுவதைத் தவிர்க்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மார்க் ஸுக்கர்பர்க் இந்த அடிப்படையில் இவ்வாறு கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார் என்பது குறித்து விளக்கப்படவில்லை இதனால் பேஸ்புக் பயன்படுத்துவோர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.அதேசமயம் ஜனநாயக ஒருமைப்பாட்டையும், மக்களின் உரிமையையும் காக்கப் போராடுவோம் என்றும் மார்க் வலியுறுத்தியுள்ளார்.

You'r reading இந்த வாரம் பேஸ்புக்கிற்கு சோதனையான காலமாம் : மார்க் கருத்து Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை