கொரோனா பாதிப்பு: ஜப்பானில் ஐந்தாவது நடிகர் தற்கொலை

by Balaji, Nov 15, 2020, 20:04 PM IST

கொரோனா பாதிப்பால் வருமானம் குறைந்து ஜப்பானில் நடிகர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக உலகம் முழுக்க தொழில்கள் முடங்கியுள்ளதோடு ஏரளாமானோர் வேலை இழந்துள்ளனர். இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த ரக தற்கொலைகள் அதிக ம் நடக்கும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. இங்கு வருமான இழப்பு காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி 4 நடிகர்களும் தற்கொலை செய்துள்ளனர்.

இந்த நிலையில் பிரபல ஜப்பானிய நடிகர் அகிரா குபோடெராவும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குபோடெரா நேற்று முன்தினம் டோக்கியோவில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது திடீரென கோமா நிலையில் காணப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல்துறையினர் இது குறித்து மேற்கொண்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்தது.

43 வயதாகும் குபோடெரா, 1995 ஆம் ஆண்டு சீரியல்களில் நடிக்கத்தொடங்கி பின்னர் மிகவும் பிரபலமானார். 2003 ஆம் ஆண்டு வெளியான பிரட்டி கார்டியன் சைலர் மூன் என்ற சீரியலில் இவர் நடித்த குன்சைட் என்ற கதாபாத்திரம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. . 2013 ஆம் ஆண்டு வெளியான ஸ்ட்ராபெரி நைட் திரைப்படத்தில் மறைந்த நடிகை யூகோ டேகுச்சியுடனும், லாஸ்ட் சிண்ட்ரெல்லா (2013) என்ற டி.வி. தொடரில் மறைந்த நடிகர் ஹருமா மியூராவுடனும் இவர் நடித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட வருமான இழப்பே இவரின் தற்கொலைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஜப்பானில் ஏற்கனவே இதே பிரச்சினை காரணமாக நான்கு நடிகர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் தற்போது அகிரா குபோடெராவும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More World News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை