கறிக்கோழி வளர்ப்பவர்கள் ஸ்டிரைக்: சிக்கன் வியாபாரத்தில் சிக்கல்

by Balaji, Nov 15, 2020, 20:02 PM IST

கூலி உயர்வு கேட்டு தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப்பவர்கள் கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கறிக்கோழிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

தமிழகத்தில் சேலம் திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோழி வளர்ப்பு பண்ணைகள் வைத்திருப்போர் கார்ப்பரேட் கறிக்கோழி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ஒரு கிலோவுக்கு ஒரு தொகை என்ற அடிப்படையில் கோழிகளை வளர்த்து நிறுவனங்களுக்கு அளித்து வருகின்றனர்.

தற்சமயம் கறி கோழி வளர்க்க ஒரு கிலோவிற்கு ரூபாய் 12 கூலி ரூபாய் அதிகம் தர வேண்டும் என்று கோரி கடந்த 4 நாட்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக கறிக்கோழி விற்பனை யில் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு 1 கோடி கோழி குஞ்சுகள் வளர்ப்பதும் , 2 கோடி கிலோ கறிக்கோழி உற்பத்தியும் இதனால் தடை பட்டுள்ளது. இதனால் கோழிகறி தட்டுப்பாடு ஏற்படுவதுடன் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது

எனவே அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு சுமூக தீர்வு ஏற்படுத்தி கூலி உயர்வு கிடைக்க வழி செய்ய வேண்டும் என கோழி வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூலி உயர்வு அளிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒப்புக் கொள்ளவில்லை எனவே அரசு இதில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட வழி செய்ய வேண்டும் என கோழி வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கோழி வளர்ப்போர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் கார்ப்ரேட் நிறுவனங்கள் கோழி குஞ்சுகளை அண்டை மாநிலங்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை