மூன்றரை நாட்களில் 7 கண்டங்களில் டூர்!.. கின்னஸ் சாதனையில் அரபு பெண்

UAE woman created world record

by Sasitharan, Nov 20, 2020, 18:27 PM IST

கவ்லா அல் ரோமைதி என்பவர் UAE நாட்டைச் சார்ந்தவர். இவர் 3 நாட்கள் 14 மணிநேரம் 46 நிமிடம் 48 வினாடிகளில் ஏழு கண்டங்கள் மற்றும் அதன் சார்பு பகுதிகளுக்கு பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளாா்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், ``சுமார் 200 வெவ்வேறு தேசிய இனங்களை கொண்டுள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். அதனால் அவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சார மரபுகளை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினேன். அதனால் இந்த சவாலான பயணத்தை மேற்கொண்டேன்" என்றார்.

இந்த பயணத்தின் போது அதிகமான விமான பயணங்கள் செய்ததாகவும் அதிக பொறுமையுடன் விமான, நிலையங்களில் காத்திருந்ததாகவும் தன் அனுபவத்தைக் கூறினாா் அல் ரோமைதி. மேலும் அவர் 208 நாடுகளையும் அதன் சாா்பு பகுதிகளையும் பாா்வையிட்டாா் என்பது குறிப்பிடதக்கது. மேற்படி, இந்த சுற்றுப்பயணம் பிப்ரவரி 20.2020 அன்று ஆஸ்ரேலியாவில் நிறைவடைந்ததுள்ளது. அதன் பின்னா் தன், சமூகத்திற்கு மரியாதை,கிடைக்கும், வகையில் இந்த கின்னஸ் உலக சாதனை அமைந்துள்ளது என அவர் கூறியது பாராட்டை பெற்று வருகிறது.

You'r reading மூன்றரை நாட்களில் 7 கண்டங்களில் டூர்!.. கின்னஸ் சாதனையில் அரபு பெண் Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை